முக்கிய செய்திகள்

அழகப்பா பல்கலைக்கழகத்தில் 32-வது பட்டமளிப்பு விழா : ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்பு..

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் 32-வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக பட்டமளிப்பு அரங்கில்  வெகு விமர்சையாக நடைபெற்றது.

அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் நா. ராஜேந்திரன் வரவேற்பு உரை நிகழ்த்தினர்.

தமிழக ஆளுநரும் பல்கலைக்கழக வேந்தருமான பன்வாரிலால் புரோகித் மாணவர்களுக்கு பட்டமளித்து சிறப்புரையாற்றினார்.

மாண்புமிகு தமிழக உயர்கல்வித்துறை அமைச்சரும் பல்கலைக்கழக இணை வேந்தருமான கே.பி. அன்பழகன் விழாவில் பங்கேற்று பேசினார்.

விழாவில் சென்னை ஸ்ரீராமசந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி மேனாள் துணைவேந்தர் மருத்துவர் ஜே.என்.எஸ் மூர்த்தி சிறப்புரை நிகழ்த்தினார்.

இப்பட்டமளிப்பு விழாவில் பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 2080 மாணவர்களும்,இணைப்புக் கல்லுாரியைச் சேர்ந்த 11,020 மாணவர்களும்,

இணைவுக் கல்வித் திட்டத்தின் கீழ் 1,062 மாணவர்களும்,தொலைநிலைக் கல்வி இயக்கத்தின் வாயிலாக பயின்ற 12,646 மாணவர்களையும் சேர்த்து மொத்தம் 26,808 மாணவ, மாணவியர்களுக்கும் பட்டங்கள் வழங்கப்பட்டன.

பட்டம் பெற்றவர்களில் 8715 மாணவர்களும்,18,093 மாணவிகளும் அடங்குவர்.

இதில் 325 மாணவ,மாணவியர் தமது பட்டங்களை நேரடியாக பெற்றனர். அவர்களில் Doctor of Science(D.Sc.,) பட்டத்தை முனைவர் பாண்டிமா தேவி பெற்றார்.

பல்கலைக்கழக பதிவாளர் நன்றி உரை நிகழ்த்தினார்.