காரைக்குடியில் சாலைகளை சீரமைக்க காலம் தாழ்த்தி வருவதை கண்டித்து காங்., சட்டமன்றத் தலைவர் கே.ஆர் ராமசாமி தர்ணா போராட்டம்..

காரைக்குடி சட்டமன்ற உறுப்பினரும்,சட்டமன்ற காங்கிரஸ் தலைவருமான கே.ஆர் ராமசாமி இன்று காலை காரைக்குடி சாலைகளை சிரமைக்க வலியுறுத்தி 2-பீட் அண்ணா சிலை அருகில் அமர்ந்து கடந்த 2 மணி நேரமாக போராட்டம்

காரைக்குடி சட்டமன்ற உறுப்பினரும்,சட்டமன்ற காங்கிரஸ் தலைவருமான கே.ஆர் ராமசாமி இன்று காலை காரைக்குடி சாலைகளை சீரமைக்க காலம் தாழ்த்தி வருவதை கண்டித்து 2-பீட் அண்ணா சிலை அருகில் அமர்ந்து கடந்த 2 மணி நேரமாக போராட்டம் நடத்திவருகிறார்.


காரைக்குடியில் பாதாள சாக்கடை திட்டம் நடைபெற்றதால் நகரின் பிரதான சாலைகள் முதல் நகர வீதிகள் அனைத்தம் குண்டும் குழியுமாக காட்சியளித்தன. சாலைகளை உடனே சீரமைக்க வலியறுத்தி காங்கிரஸ்,திமுக உட்பட எதிர்கட்சிகள் பல கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர்.

பிப்ரவரி 2-ஆ் தேதி முதல் சாலைகள் சீரமைக்கும் பணி தொடங்கவுள்ளதாக கடந்தவாரம் தேவகோட்டையில் நடைபெற்ற போராட்டத்தின் போது அதிகாரிகள் உறுதியளித்திருந்தனர்.

இந்நிலையில் இன்று காலை சாலை சீரமைப்பு பணிகளை மேற்பார்வையிட வந்தார் சட்டமன்ற தலைவர் கே.ஆர் ராமசாமி. அப்போது சாலைகளை சீரமைக்கும் ஆர்ம்பக் கட்ட பணிகள் கூடத் தொடங்கவில்லை என்பதையறிந்தவுடன் 2-ம் பீட் அண்ணாசிலை அருகே அமர்ந்து தர்ணா போராட்டத்தை நடத்தினர். கடந்த 2 மணி நேரமாக போராட்டம் நடத்திவரும் நிலையில்,

தர்ணா போரட்டம் நடத்திவரும் சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர் ராமசாமியுடன் காரைக்குடி வட்டாச்சியர் ஜெயந்தி பேச்சுவார்த்தை நடத்திவருகிறார்.

தற்போது காரைக்குடி வட்டாச்சியர் ஜெயந்தி பேச்சுவார்த்தை நடத்திவருகிறார். பேச்சுவார்த்தையில் காரைக்குடி சரக காவல் துணைக் கண்காணிப்பாளர் அருண் உடனிருக்கிறார்.

சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர் ராமசாமியுடன், சங்கராபுரம் முன்னாள் பஞ்சாயத்துத் தலைவர் மாங்குடி, நகர காங்., தலைவர் பாண்டி மெய்யப்பன், கம்யூனிஸ்ட் பி.எல்.ராமச்சந்திரன் உட்பட ஐம்பதிற்கும் மேற்பட்டோர் தர்ணா போராட்டத்தில் பங்கேற்றனர்.
திடீரென காங்கிரஸார் சட்டமன்ற உறுப்பினர் முன்பு சாலையில் படுத்து புரண்டு போராட்டம் செய்தனர்.

பேச்சுவார்த்தையில் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் எழுத்துப்பூர்வமாக 30 நாட்களுக்குள் சாலைகள் சீரமைக்கும் பணியை முடிப்பதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து 4 மணி நேர தொடர் தர்ணா போராட்டம் முடிவுக்கு வந்தது.

செய்தி & படங்கள்
சிங்தேவ்