காரைக்குடியில் பாதாள சாக்கடைத்திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தி கார்த்தி சிதம்பரம் எம்பி தலைமையில் காங்.. ஆர்ப்பாட்டம் ..

காரைக்குடியில் பாதாள சாக்கடைத்திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்திய ஆர்ப்பாட்டத்தில் கார்த்தி சிதம்பரம் எம்பி காரைக்குடி சட்டப்பேரவை உறுப்பினர் கே.ஆர்.இராமசாமி, மாங்குடி பங்கேற்றனர்

காரைக்குடியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்டம் தரமற்றதாகவும், தாமதமாகவும் நடைபெறுவதைக் கண்டித்து சிவகங்கை மக்களவை உறுப்பினர் ப.சிதம்பரம் தலைமையில் காரைக்குடி ஐந்து விளக்கு அருகில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்திவருகின்றனர்.

காரைக்குடியில் பல வருடங்களாக பாதாள சாக்கடை அமைப்பதற்காக சாலைகள் எல்லாம் தோண்டப்பட்டு வருகிறது. ஆமை வேகத்தில் சாக்கடைத்திட்டம் நிறைவேறிவருவதால் நகர சாலைகள்,தெருக்கள் எல்லாம் குண்டும், குழியுமாகக் காட்சியளிக்கின்றன.

காரைக்குடி நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்திற்காக 112 கோடியே 52 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு கடந்த இரண்டாண்டுகளாக பணி நடைபெ்று வருகிறது. இதுவரை பணிகள் முடிக்கப்பட்ட 39 பகுதிகளில் ரூ.67 கோடிக்கு சாலைகள் போடப்பட்டன.
இந்த சாலைகள் தரமற்றதாக இருப்பதால் சாலைகள் குண்டும் குழியுமாக காணப்படுகிறது.

இத்திட்டத்தை விரைந்து நிறைவேற்றாமல் அரசு தாமதப்படுத்திவருவதால் தற்போது மழைக்காலத்தில் மழை நீர் வடிய வடிகால் இல்லாமல் சாலைகளிலும்,தெருக்களிலும் குளம் போல் தேங்கி நிற்கின்றன.

காரைக்குடியில் பாதாள சாக்கடைத்திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தி கார்த்தி சிதம்பரம் எம்பி தலைமையில் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம்

காரைக்குடி பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தி கார்த்தி சிதம்பரம் எம்.பி தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியிருந்தார்.

சட்டப்பேரவை உறுப்பினர் கே.ஆர்.இராமசாமி பலமுறை ஒப்பந்தக்காரர்கள்,அதிகாரிகளிடம் விரைந்து முடிக்க வலியுறுத்தி வந்துள்ள போதிலும் பணிகள் தாமதமாகவே நடைபெற்று வருகிறது.

இதனைத் தொடர்ந்து இன்று காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கார்த்தி சிதம்பரம் தலைமையில் காரைக்குடி சட்டப் பேரவை உறுப்பினரும் தமிழக காங்கிரஸ் சட்டப்பேரவைத் தலைவருமான் கே.ஆர.இராமசாமி , மாங்குடி காங்கிரஸ் நிர்வாகிகள் உள்பட ஏராளமான காங்கிரசார் போராட்டத்தில் பங்கேற்று பாதாள சாக்கடைத் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய கார்த்தி சிதம்பரம் பாதாள காக்கடை திட்டத்தை தாமதமாக நிறைவேற்றி வருவதால் வாககனங்களில் செல்வோர் மிகம் பாதிக்கப்படுகின்றனர். நானே பாதிக்கப்பட்டேன் எனது தோள்பட்டையில் வலி ஏற்பட்டு அப்பலோ மருத்துவ மனையில் சிகிச்சைபெற்று வந்தேன் என்று தெரிவித்தார்.

செய்தி & படங்கள்
சிங்தேவ்