காரைக்குடியில் ஆக்கிரமிப்பு அகற்றம் : நகர் முழுவதும் நடவடிக்கை பாயுமா ?.. பொதுமக்கள் எதிர்பார்ப்பு..

காரைக்குடி கல்லுாரி சாலையில் வருமானவரித்துறை அலுவலகம் அருகில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் நகராட்சி நிர்வாகம் ஈடுபட்டது.
காரைக்குடி நகர் முழுவதும் சாலைகளில் கடைகள் ஆக்கிரமிப்பால் நாள்தோறும் போக்குவரத்து சிக்கலாகவுள்ளது.அன்றாடம் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அவதிக்குள்ளாவது தொடர்கதையாக இருந்து வருகிறது. காரைக்குடி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டுமென வலியுறுத்தி வந்தனர்..

இந்நிலையில் இன்று கல்லுாரி சாலையில் வருமானவரித்துறை அலுவலகம் அருகே அக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
ஆக்கிரமிப்பு அகற்றுவதைப் பார்த்த பொதுமக்கள் சிலர் இந்த நடவடிக்கை நகர் முழுவதும் எந்தவிதமான பாராபட்சமின்றி தொடரவேண்டும் என்றனர்.

மேலும் அவர்கள் செய்தியாளர்களிடம் இதே கல்லுாரி சாலையில் சுப்பிரமணியபுரம் 1-வது தெருவில் ஆரியபவன் உணவகம் எதிரில் செயல்பட்டுவரும் பேக்கரி அக்கிரமிப்பு செய்துள்ளதை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

அன்மையில் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு ஒன்றில் அக்கிரமிப்பு நடைபெறும் போது ஏன் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை சாலைகளில் ஆக்கிரமிப்பு நடைபெறும் போது அதிகாரிகள் மெத்தனமாக இருந்தது ஏன் எனக் கேள்வியெழுப்பி, ஆக்கிரமிப்புகளுக்கு அதிகாரிகளின் பொறுப்பின்மைதான் காரணம் எனத் தெரிவித்துள்ளது.

காரைக்குடி நகர மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கை தொடருமா என்று நகராட்சி அதிகாரிகளிடம் நாம் கேட்டபோது நிச்சயமாக காரைக்குடி நகர் முழுவதும் சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் எனத் தெரிவித்தனர்.

ஆக்கிரமிப்பு நடவடிக்கை பாராபட்மின்றி தொடருமா …பொறுத்திருந்து பாரப்போம்.

செய்தி & படங்கள்
சிங்தேவ்