காரைக்குடியில் “வருமானவரி செலுத்துவோர் விழிப்புணர்வுக் கருத்தரங்கம்“…

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இந்திய அரசு வருமான வரித்துறையின் சார்பில், “வருமானவரி செலுத்துவோர் விழிப்புணர்வுக் கருத்தரங்கம், டிச.11 திங்கள்கிழமை மாலை, தொழில் வணிகக் கழக அரங்கில் நடந்தது.

மதுரை வருமான வரித்துறை துணை ஆணையர் S. சாந்த சொரூபன் தலைமை வகித்து வரவேற்புரையாற்றினார்.
சிறப்புரை வழங்கிய காரைக்குடி வருமான வரி அதிகாரி ஜி. சுப்பிரமணியன் கூறியதாவது:
காரைக்குடி வருமான வரி அதிகாரி ஜி. சுப்பிரமணியன் கூறியதாவது:

  1. நடப்பு ஆண்டில் பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் வருமான வரி செலுத்துபவர்கள் முன்கூட்டி வரி (Advance tax) செலுத்த வேண்டும்.
  2. நடப்பாண்டின் வருமானத்திற்கான வரியை இந்த ஆண்டிலேயே செலுத்த வேண்டும். ஏனெனில் இந்த ஆண்டில் அரசு மேற்கொள்ளும் நாட்டின் வளர்ச்சி திட்டங்களுக்கு பேருதவியாக இருக்கும்.
  3. நடப்பு ஆண்டில் உத்தேச வருமானத்திற்கான வருமான வரியில் 75 சதவிகிதம் வரும் டிசம்பர் 15ஆம் தேதிக்குள் செலுத்தப்பட வேண்டும்.
  4. முன்கூட்டி வரி செலுத்த தவறும் பட்சத்தில் 12 சதவிகிதம் வட்டி வசூலிக்கப்படும்.
  5. மேலும் வருமான வரி சட்ட விதிகளின்படி நடவடிக்கைகளும் உண்டு.
  6. எனவே டிசம்பர் 15ஆம் தேதிக்குள் 75 சதவீத வரியை செலுத்தி, நாட்டின் வளர்ச்சிக்கு உதவுவதுடன் வட்டி மற்றும் அபராதத்தை தவிர்க்கவும்.

அடுத்து வருமானவரி அலுவலர் (ITO) ஆர். ஆண்டி உரையாற்றினார்.

கருத்தரங்கில் ஆடிட்டர்கள் சங்கத் தலைவர் பி.வெங்கடாசலம், தொழில் வணிகக்கழகத் தலைவர் சாமி திராவிடமணி வாழ்த்துரையாற்றினார்கள். வருமான வரி ஆய்வாளர் எம். பத்மாவதி நன்றி கூறினார்.

செய்தி & படங்கள்
சிங்தேவ்