காரைக்குடியில் கம்பன் விழா 2-ஆம் நாள்: தமிழறிஞர்கள் பங்கேற்பு..

காரைக்குடியில் ஒவ்வொரு ஆண்டும் கம்பன் திருவிழா கொண்டாடப்படும் இதில் உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் தமிழ் அறிஞர்கள் பங்கேற்பர்.

16.03.2022 அன்று 83-வது கம்பன் விழா தமிழ்தாய் கோயில் அமைந்துள்ள கம்பன் மணிமண்டபத்தில் தொடங்கியது. நேற்று 2-ஆம் நாள் விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் நாஞ்சில் சம்பத் சிறப்புரையாற்றினார் .

அவர்பேசும் போது தோழர் ஜீவா அவர்களை கம்பன் விழாவிற்கு கம்பன் அடிப்பொடி சா.கணேசன் அவர்கள் பேச அழைத்துள்ளார். 40 நிமிடங்கள் பேச அனுமதியளிக்கப்பட்டுள்ள நிலையில் தோழர் ஜீவா அதையும் தாண்டி உரையாற்றினார். 40 நிமிடங்களில் சிவப்பு விளக்கு போடாமல் ஜீவாவை பேச வைத்தார் சா.கணேசன், அனைவருக்கும் அதிர்ச்சி, நேரம் தவறாமையை கடைப்படிப்பவர்,கண்ணதாசனுக்கு கட்டுபாடு விதித்தவர்,கலைஞருக்கு கட்டுப்பாடு விதித்தவர் ஜீவாவை பேச அனுமதித்தது ஏன் என்பது குறித்து சா.கணேசன் கூறும் போது கம்பனே இங்கு வந்து உரை நிகழ்த்தியது போல் ஜீவாவின் பேச்சு அமைந்தது,அதனால் தான் சிவப்பு விளக்கை எரியவிடவில்லை என்றும் ஜீவாவிற்கு பிடித்த நிறம் சிவப்பு என்பதால் சிவப்பு விளக்கை எரியவிட்டால் அவர் பேச்சை நிறுத்துவாரா அதனால் தான் சிவப்பு விளக்கை எரியவிடவில்லை என்றாராம். என்ற பழைய நினைவுகளைக் கூறினார் நாஞ்சில் சம்பத்.

விழாவில் ஊரக உள்ளாட்சி துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பேசும் போது தமிழ்தாய் கோயில் சீரமைக்க முதல்வரிடம் வலியுறுத்துவோம் என்றார்.காரைக்குடி கம்பன் கழகப் புரவலர் ஏ.சி.முத்தையா,கம்பன் கழகத் தலைவர் சக்தி திருநாவுக்கரசு உள்பட பல தமிழ் அறிஞர்கள் உரையாற்றினர்.
மரபின் மைந்தன் முத்தையா தலைமையில் பட்டிமன்றம் நடைபெற்றது.

3-ஆம் நாள் விழாஇன்று நடைபெறுகிறது. நாளை நாட்டரசன் கோட்டையில் அமைந்துள்ள கம்பன் அருட் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெறவுள்ளன.

செய்தி & படங்கள்

சிங்தேவ்