திருவண்ணாமலையில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு பௌர்ணமி கிரிவலம்: லட்சக்கணக்கானோர் பங்கேற்பு..

பஞ்ச புதங்களில் அக்னித் தலமாகவும் நினைத்தாலே முக்தி தரும் தலமாகவும் விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் பின்புறம் அமைந்துள்ள மலையை சுற்றி 14 கி.மீ கிரிவலப்பாதை அமைந்துள்ளது. ஒவ்வொரு மாதமும் பொளர்ணமி தினத்தன்று பக்தர்கள் கிரிவலம் செய்வார்கள்.
கடந்த 2 ஆண்டுகாலமாக கரோனா பெருந்தொற்றால் பக்தர்கள் கிரிவலம் செல்ல தடைவிதிக்கப்பட்டிருந்தது. தற்போது பங்குனி மாத பௌர்ணமி கிரிவலம் செல்ல திருவண்ணாமலை ஆட்சியர் அனுமதியளித்தார்.
அதனைத் தொடர்ந்து நேற்று பிற்பகல்(17.03.2022) முதல் இன்று (18.3.2022) பிற்பகல் வரை பௌர்ணமி என்பதால் நேற்று இரவு முழுவதும் தமிழ்நாடு,ஆந்திரா,கர்நாடாவைச் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செய்தனர்.
கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு ஒருவேண்டுகோள் இறை சக்தி நிறைந்த கிரிவலப் பாதையில் குப்பைகளைப் போடாதீர்,அசுத்தம் செய்யாதீர்