காரைக்குடியில் எல்ஐ.சி பங்கு விற்பனையைக் கைவிட வலியுறுத்தி தர்ணா போராட்டம்..

நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி யின் பங்குகளை தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவு செய்ததை எதிர்த்து மாநிலம் தழுவிய தர்ணா போராட்டம் நடைபெறும் நிலையில்
காரைக்குடியில் கண்ணதாசன் மணிமண்டபம் அருகில் காப்பீடு கழக ஊழியர்கள் மதுரை கோட்டம் சார்பில் மாபெரும் தர்ணா போராட்டம் நடைபெற்றது. போராட்டம் குணசேகரன் தலைமையில் நடைபெற்றது, இதில் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி கலந்து கொண்டு தர்ணா போராட்டத்தில் பேசினார். மேலும் தொழில் சங்க தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த தர்ணா போராட்டத்தில் 39 லட்சம் கோடி அளவு சொத்து வைத்துள்ள மிகப்பெரிய லாபம் தரும் நிநுறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்பது ஏன் எனக் கேள்வியெழுப்பினர்.வருட வருமானமாக 6.2 லட்சம் கோடி உள்ளது.

அரசு பத்திரங்களுக்கு 13,87,821 முதலீடு,
மாநில அரசு பத்திரங்களில் 9,87,821 கோடி முதலீடு,
மின்சாரத்திட்டங்களில் 1,23,532 கோடி முதலீடு,
தேசிய சாலைத் திட்டங்களில் 90,948 முதலீடு

என நாட்டின் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கும் எல்.ஐ.சி நிறுவனப் பங்குகளை விற்கலாமா எனக் கூறி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மேலும் 2 பொதுத்துறை வங்கி, பொதுத்துறை காப்பீட்டு நிறுவனம் மற்றும் ரயில்வே தனியார் போன்ற செயல்களை ஒன்றிய அரசு கைவிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
செய்தி & படங்கள்
சிங்தேவ்