முக்கிய செய்திகள்

காரைக்குடியில் பள்ளி ஆசிரியை அடித்ததால் மாணவன் காயம் : பெற்றோர் அச்சம்..


சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கழனிவாசல் சாலையில் ஆசாத் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது.

இப்பள்ளியில் 7 -ம் வகுப்பு படிக்கும் மாணவன் யாசிக்கை அறிவியல் ஆசிரியை கவிதா ஸ்டீல் ஸ்கேல் கொண்டு கையில் பலமாக அடித்துள்ளார்.

யாசிக்க கையில் பலத்த காயம் ஏற்பட்டு இரத்தம் சொட்டியது.

மாணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கையில் கட்டுப் போடப்பட்டுள்ளது.

ஆசிரியை அடித்ததால் காயம் ஏற்பட்டதை அறிந்த பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர்கள் அச்சமடைந்துள்ளனர்.

மாணவர்களை கண்டிக்கும்,தண்டிக்கும் உரிமை ஆசியர்களுக்கு ஆண்டு ஆனால் அதுவே தண்டிப்பது போல் இது போன்ற தாக்குதல்கள் நல்லதல்ல என பெற்றோர்களும் சமூக ஆர்வலர்களும் தெரிவிக்கின்றனர்.