முக்கிய செய்திகள்

கர்நாடகாவில் விவசாயிகள் கடன் தள்ளுபடி..


கர்நாடகாவில் இரண்டு லட்ச ரூபாய் வரையில் விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யப்படும் என பட்ஜெட் தாக்கல் செய்த முதல்வர் குமாரசாமி தெரிவித்தார்.

கர்நாடக முதல்வராக பதவியேற்ற பின்னர் குமாரசாமி தனது அரசின் முதல்பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில், விவசாயிகள் கடனில் ரூ. 2 லட்சம் வரை தள்ளுபடி செய்யப்படும். இதனால், அரசுக்கு 34 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும். குறைந்த விலையில் உணவகமான ‘இந்திரா கேண்டீன்’ மாவட்டந்தோறும் விரிவாக்கம் செய்யப்படும் என அறிவித்தார்.