முக்கிய செய்திகள்

கேரளத்தில் கனமழை : ரெட் அலர்ட் எச்சரிக்கை..

கேரளத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், காசர்கோடு மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை வெளுத்து வாங்குகிறது. நேற்று கண்ணூர் உள்ளிட்ட பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழையால் இடுக்கி மாவட்டத்தில் உள்ள Kallarkutty அணையின் மதகு திறக்கப்பட்ட காட்சிகளும் வெளியாகியுள்ளன.

சபரிமலை ஐயப்பன் கோவில் அமைந்துள்ள பத்தனம்திட்டா மாவட்டத்தில் கனமழை காரணமாக, கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் அவதிக்கு ஆளாகினர்.

பம்பை ஆற்றில் குளிக்கும் பக்தர்கள் எச்சரிக்கையோடு இருக்குமாறும் காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்பதைக் குறிக்கும் வகையில், காசர்கோடு மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இடுக்கி, கண்ணூர், கோழிக்கோடு, மலப்புரம், வயநாடு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

கோழிக்கோடு மற்றும் வயநாடு மாவட்டங்களுக்கு நாளை மற்றும் நாளை மறுநாளும் ரெட்அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மலப்புரம், கண்ணூர் மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.