முக்கிய செய்திகள்

அணை பாதுகாப்பு மசோதா தமிழகத்திற்கு ஏற்புடையது அல்ல : பேரவையில் முதல்வர் பழனிசாமி..

அணை பாதுகாப்பு மசோதா தமிழகத்திற்கு ஏற்புடையது அல்ல மசோதாவை திரும்ப பெற பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளோம் என ஸ்டாலின் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதில் அளித்து முதல்வர் பழனிசாமி கூறினார்.

அணைப் பாதுகாப்பு மசோதா குறித்து சட்டசபையில் மு.க.ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

அணைப் பாதுகாப்பு மசோதாவின் மூலம் மாநிலங்களின் உரிமையை மத்திய அரசு பறிக்க முயல்கிறது. அணைப் பாதுகாப்பு சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என கூறினார்.

அணைகள் பாதுகாப்பு தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானத்தில் மு.க.ஸ்டாலின் கேள்விக்கு முதலமைச்சர் பழனிசாமி பதில் அளித்து பேசும் போது கூறியதாவது:-

அனைத்து மாநிலங்களும் இந்த மசோதாவை ஏற்கும் வரை நிறுத்தி வைக்க வேண்டும் என ஏற்கனவே வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த மசோதா, தமிழகத்திற்கு ஏற்புடையது அல்ல. பிரதமருக்கு ஏற்கனவே, இந்த மசோதாவை திரும்ப பெற கடிதம் எழுதி உள்ளோம்.

நான்கு அணைகள் மீதான தமிழகத்தின் உரிமையை நிலை நாட்ட தமிழக அரசு குரல் கொடுக்கும் என கூறி உள்ளார்.