முக்கிய செய்திகள்

இரவு விருந்துடன் நடைபெற இருக்கும் கிம் – மூன் சந்திப்பு!

அணு ஆயுதச் சோதனைகளைக் கைவிடுவதாக வடகொரிய அதிபர் அறிவித்ததை அடுத்து, கொரிய தீபகற்பத்தில் அமைதி திரும்புவதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. வரும் வெள்ளிக்கிழமை வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன்னும், தென் கொரிய அதிபர் மூன் ஜே இன்-னும் சந்திப்பது உறுதியாகி உள்ளது. வெள்ளிக்கிழமை பிற்பகல் பால் முன் ஜோம் (Panmunjom) பகுதியில் நடைபெறும் இந்தச் சந்திப்பில், இரு தலைவர்களும் இரவு விருந்தில் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. தென்கொரிய அதிபர் மாளிகையின் செய்தித் தொடர்பாளர் குவுன் ஹியுக் கி (Kwun Hyuk-ki ) அதிகாரபூர்வமாக இத்தகவலை அறிவித்துள்ளார். முன்னதாக இன்று (திங்கள்) கிழமை இருநாட்டு அதிகாரிகள் மட்டத்திலான சந்திப்பும் நடைபெற்றுள்ளது. கிம் – மூன் சந்திப்புக்கான ஏற்பாடுகளைச் செய்வதற்கா, புதன் கிழமையே வடகொரிய அதிகாரிகள் போல் முன் ஜோமுக்கு வருகைதர உள்ளனர். கொரிய தீபகற்பத்தில் நீடித்து வந்த பதற்றத்தால், மூன்றாம் உலகப்போரே மூண்டு விடுமோ என உலக சர்வதேச சமூகம் அஞ்சிக்கொண்டிருந்தது. இந்த நிலையில், வடகொரிய – தென் கொரிய தலைவர்கள் சந்திப்பு சற்றே அந்தப் பதற்றத்தைத் தணிக்கும் வகையில் உள்ளது. சுமார் 64 ஆண்டுகளாக நீடித்து வரும் வடகொரிய – தென் கொரிய மோதல் இத்துடன் முடிவுக்கு வந்தால் உலகிற்கே நிம்மதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்தநிம்மதி கிடைக்குமா?

Koreas agree to start Moon-Kim summit in morning, hold official dinner