கோட்டையூர் பேரூராட்சியில் ஒப்பந்த பணி கோரிய கடிதங்கள் கிழிக்கப்பட்டதா?.. மறைக்கப்பட்டதா?..

கோட்டையூர் பேரூராட்சியில் ரூ.2 கோடியே 93 இலட்சம் ஒப்பந்த பணி கோரிய கடிதங்களில் இருவருடைய உரையிட்ட ஒப்பந்த பணிக் கடிதங்கள் காணவில்லை என்று ஒப்பந்த பணி கோரியவர்கள் பேரூராட்சி அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள கோட்டையூர் பேரூராட்சியில் நபார்டு திட்டம் 2021-2022 -ன் கீழ் சக்தி நகரில் தார் சாலை அமைக்க சுமார் ரூ2. கோடியே 93 இலட்சத்திற்கு ஒப்பந்தப் பணி கோரப்பட்டது.
தார் சாலை அமைக்க ஒப்பந்தம் கோருவோர் 05.04.2022 அன்று மதியம் 3 மணிவரை ஒப்பந்தக் கடிதங்களை 8 லட்ச ரூபாய் வரவோலையுடன் இணைத்து பேரூராட்சி அலுவலகத்தில் உள்ள பெட்டியில் போடுமாறு கோரியிருந்தது கோட்டையூர் பேரூராட்சி .
பெட்டியில் இருந்த கடிதங்கள் பிற்பகல் 3.30 மணிக்கு திறந்து அணைவர் முன்னிலையிலும் ஒப்பந்த பணிக்கான ஒப்பந்தகாரர் தேர்வு செய்யப்படுவார் என்று கூறியிருந்தனர்.
இந்நிலையில் பிற்பகல் 3.30 மணிக்கு பணி ஒப்பந்த பெட்டியை திறந்த போது உள்ள உறையிட்ட கடிதங்கள் 2 காணவில்லை என ஒப்பந்தக்காரர் கேள்வியெழுப்பினார். மேலும் எங்கள் ஒப்பந்த கடிதங்கள் எங்கே யார் பெட்டியை 3.30 மணிக்கு முன் யாரும் இல்லாத நேரத்தில் திறந்தது எனக் கேட்டிருக்கிறார்.
தார்சாலை ஒப்பந்த பணி கோரிய M.விஜயலெட்சுமி மற்றும் G.சாந்தி இருவருடைய உறையிட்ட கடிதங்களைக் காணவில்லை என்றனர்.
இது குறித்து நம்மிடம் பேசிய எம்.விஜயலெட்சுமி ஒப்பந்தகாரர் பாண்டி
தார்சாலை அமைக்க கோரிய உறையிட்ட ஒப்பந்தக் கடிதங்கள் பிற்பகல் 3.30 மணிக்கு திறப்பதாகத்தான் பேரூராட்சியில் சொன்னார்கள். நாங்கள் 3.30 மணிக்கு பெட்டியை திறந்து பார்த்தால் 2 ஒப்பந்தங்கள் கோரிய உறையிட்ட கடிதங்கள் காணவில்லை என்றார்
மேலும் அவர் பெட்டியை திறக்கும் முன் பேரூராட்சி சிறப்பு அதிகாரி கவிதாவின் உதவியாளர் முத்து ராக்கு பெட்டியை உடைத்து 2 ஒப்பந்தங்கள் கோரிய உறைக்கவரை எடுத்து மறைத்து விட்டதாகக் கூறினார். ஒப்பந்தம் கோர முன்பணமாக ரூ.8 லட்சத்திற்கான வரவோலை இணைத்துள்ளதாகவும் தெரிவித்தார். தான் கோரிய ஒப்பந்த பணியால் அரசுக்கு 60 லட்சம் வருவாய் கிடைக்கும் என்றார்.
திமுகவைச் சேர்ந்த ஆனந்தன் ( சாக்கோட்டை மேற்கு ஒன்றியக் பொறுப்பாளர்) கூட்டணி அமைத்து முறைகேடாக ஒப்பந்தப் பணியை மதுரையைச் சேர்ந்த நபருக்கு கொடுத்துவிட்டதாக தெரிவித்தார்.

கோட்டையூர் பேரூராட்சி சிறப்பு அதிகாரி கவிதாவிடம் இது குறித்து நாம் கேட்டபோது
தார்சாலை ஒப்பந்த பணி டென்டர் முறையாக நடைபெற்றதாகவும்,இதில் முறைகேடு நடைபெறவில்லையென்றும் மேலும் காணாமல் போனதாக சொல்லப்படும் 2 ஒப்பந்த பணி கோரிய உறையிட்ட கடிதங்கள் உள்பட 4 கடிதங்கள் தம்மிடம் பத்திரமாக உள்ளதாகவும்,பாண்டி என்பவர் ஒப்பந்த பணி தனக்கு கிடைக்காத காரணத்தால் பிரச்சனை செய்ததாக தெரிவித்தார். மேலும் இது குறித்து உயர் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளதாகவும் கூறினார்.

செய்தி &படங்கள்
சிங்தேவ்