தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளாரின் “நாண் மங்கல விழா” : அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் பங்கேற்பு..

சிவகங்கை மாவட்டம் குன்றக்குடியில் அமைந்துள்ள பழம் பெருமை வாய்ந்த குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீன மடத்தின் 46-வது குருமகா சன்னிதானம் தவத்திரு பொன்னம்பல அடிகளாரின் நாண் மங்கல விழா ( பிறந்த நாள் விழா, ஆதீனங்களின் பிறந்த நாளை நாண் மங்கல விழா என்று கொண்டாடுவது வழக்கம் ) வியாழக்கிழமை குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீன மடத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது.


நாண்மங்கல விழாலையொட்டி தவத்திரு பொன்னம்பல அடிகளார் காலையில் பூஜை மடம் வழிபாடு தொடர்ந்து சண்மகநாதப் பெருமான் வழிபாடு நடத்தினார்கள். மதியம் குன்றக்குடி அருளாலய வழிபாடு நடைபெற்றது.


விழாவில் தமிழக ஊரக உள்ளாட்சிதுறை அமைச்சர் மாண்பமிகு கே.ஆர்.பெரிய கருப்பன் கலந்து கொண்டு தவத்திரு பொன்னம்பல அடிகளாருக்கு மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

குன்றக்குடி பள்ளி மற்றும் கல்லுாரிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கினார். மேலும் தருமைக் கயிலைகுருமணி மேல்நிலை பள்ளியில் நுண்ணறிவு வகுப்பறையைத் திறந்து வைத்து, பள்ளி நுாலக்திற்கு புத்தகங்கள் வழங்கி, அதிக மதிப்பெண்கள் பெற்ற மள்ளி மாணவ,மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கினார். குன்றக்குடி மருத்துவமனைக்கு 10 நாற்காலிகள் வழங்கப்பட்டன.


விழாவில் அமைச்சர் பேசும் பொது,
அன்னை தமிழை வளர்ப்பது,ஆன்மீகம் வளர்ப்பது என இரண்டையம் பாதுகாத்து வருவதில் குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீன திருமடம் முக்கியப் பங்காற்றி வருகிறது. நான் அறநிலைத்துறை அமைச்சராக கடந்த முறை இருந்தபோது சிறப்பாக செயல்பட வழிகாட்டியவர்களில் குன்றக்குடி அடிகளார் முதன்மையானவர்.


தந்தை பெரியார் இத்திருமடத்திற்கு வருகை தந்தபோது பெரிய அடிகளார் வழங்கிய திருநீரை நெற்றியில் இட்டுக் கொள்ள வைத்த புரட்சிகரமான திருமடம் தான் குன்றக்குடி திருமடம். ஆன்மீகப் பணியம்,அரசுக்கு இணையான சமூகப் பணியும் இத்திருமடம் தொடர்ந்து மேற்கொண்ட வருகிறது. தமிழ் மொழி கலாச்சாரம் வளர்ப்பதில் மற்ற மடங்களுக்கு முன்மாதிரியாக குன்றக்குடி ஆதீனத் திருமடம் விளங்குகிறது என்றார்.


விழாவில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் ஏற்புரையாற்றினார்,குன்றக்குடி திட்டக்குழுத் தலைவர் கே. பாலகிருஷ்ணன், பேராசிரியர் ஆறு.அழகப்பன், கல்லுாரி பேராசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள்,மற்றம் பள்ளி மாணவ,மாணவியர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


செய்தி & படங்கள்
சிங்தேவ்