முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பிறந்தநாள் வாழ்த்து..

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்.

தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில்:-

சமய நல்லிணக்கம், சகோதரத்துவம், தமிழ்மொழி வளர்ச்சிப் பணிகள் கடைக்கோடி மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுப் பணிகள், அறநிலையத்துறையின் வழியே முத்திரைப் பதிக்கத்தக்க வகையில் திருக்கோயில் வளர்ச்சிப்பணிகள் எனஅனைத்து துறைகளிலும் சாதனைகள் படைத்து இன்று(01.03.2023)70-ஆவது பிறந்தநாள் விழா காணும் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் பல்லாண்டுகள் நலமுடன் வாழ வாழ்த்துகிறோம் என்று செய்திக் குறிப்பில் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்.

செய்தி & படங்கள்
சிங்தேவ்