லிங்காயத்து சமூகத்தினருக்கு மைனாரிட்டி அந்தஸ்த்து…


புதிய மதமாக அறிவிக்கப்பட்ட லிங்காயத்து சமூகத்தினருக்கு கா்நாடகா அரசு மைனாரிட்டி அந்தஸ்த்து வழங்கியுள்ளது.

கா்நாடகாவில் பல ஆண்டு காலமாக போராட்டம் நடத்தி வரும் லிங்காயத்து சமூகத்தினரின் கோாிக்கையை நிறைவேற்றும் வகையில் சித்தராமையா தலைமையிலான அரசு அந்த சமூகத்தினருக்கு தனி மதம் என்ற அங்கீகாரத்தை வழகினாா்.

கா்நாடகாவில் நடைபெறவுள்ள சட்டமன்ற தோ்தலை கருத்தில் கொண்டே லிங்காயத்து சமூகத்தினா் தனி மதமாக அறிவிக்கப்பட்டுள்ளனா் என்று பல்வேறு அரசியல் கட்சியினரும் கருத்து தொிவித்து வருகின்றனா். மேலும் லிங்காயத்து சமூகத்தினா் தனி மதமாக அறிவிக்கப்படும் பட்சத்தில் அதில் தாழ்த்தப்பட்டோருக்கான சலுகைகள் வழங்கப்படாது என்று மத்திய இணை அமைச்சா் அர்ஜூன் ராம் மெஹ்வால் தொிவித்திருந்தாா்.

இது ஒருபுறம் இருக்க அந்த மதத்தினருக்கு சித்தராமையா மைனாரிட்டி அந்தஸ்த்து வழங்கியுள்ளாா். மேலும் லிங்காயத்து சமூகத்தினரை தனி மதமாக அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கும் பரிந்துரை செய்துள்ளாா்.