மக்களவைத் தேர்தல் : 25-ந்தேதி முதல் திமுக விருப்ப மனு..

மக்களவைத் தேர்தலில் திமுகவினர் சார்பில் போட்டியிட விரும்புவோர் பிப்ரவரி 25 முதல் விண்ணப்பிக்கலாம் என திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிக்கை வெளியிட்டு்ளளார்.

வேட்பாளர்  விண்ணப்பக் கட்டணம் ரூ.25 ஆயிரம் என்று திமுக அறிவித்துள்ளது.

பூர்த்தி செய்த விண்ணப்பத்தை மார்ச் 1 முதல் மார்ச் 7-ம் தேதிக்குள் சேர்ப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

மேலும் 21 சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடவும் தி.மு.க. விண்ணப்பம் கோருகிறது எனவும், மார்ச் 1-ம் தேதி முதல் 7-ம் தேதிக்குள் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.