விடுதலைப் புலிகள் மீதான தடை தவறானது : பிரிட்டன் நீதிமன்றம் அறிவிப்பு…

விடுதலைப் புலிகள் பிரிட்டன் மீது இங்கிலாந்தில் தடை விதித்திருப்பது தவறானது என்று அந்நாட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பிரிட்டனில் விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டுள்ளது. இந்தத் தடையை எதிர்த்து கடந்த 2018-ம் ஆண்டு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கடிதம் அனுப்பியது.

இந்தக் கடிதம் அந்நாட்டின் உள்துறை செயலாளர் சஜித் ஜாவித் எம்.பிக்கு கடிதம் அனுப்பப்பட்டது.

அதனை அவர் 2019-ம் ஆண்டு நிராகரித்தார். அதனையடுத்து, நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் புலிகள் மீதான தடைக்கு எதிராக மேல்முறையீட்டு வழக்கைத் தொடர்ந்து பிரிட்டனில் தடை செய்யப்பட்ட அமைப்புகள் தொடர்பான சிறப்பு ஆணையத்தில் இந்த மேல்முறையீட்டு வழக்குத் தொடரப்பட்டது.

இந்த மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்தத் தீர்ப்பில், ‘விடுதலைப் புலிகள் மீதான பிரிட்டன் அரசின் தடை தவறானது’ என்று தீர்ப்பளித்தது.

அதனையடுத்து, பிரிட்டனில் விடுதலைப் புலிகள் மீதான தடை நீங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.