விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை காப்பாற்ற முயற்சித்தார் சோனியா..


தமது தார்மீக உரிமையான தனி ஈழம் கோரி போராடிய தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே 2009 ஆம் ஆண்டு சமயத்தில் நடைபெற்ற இறுதிக்கப்பட்ட போரில் இலங்கை அரசின் இனவாத போக்கினால் இலட்சக்கணக்கிலான தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர்.

எண்ணற்ற தமிழர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி புலம்பெயர் தேசங்களில் ஏதிலிகளாய் – அகதிகளாய் வாழ்ந்துவருகின்றனர். அப்பட்டமாக போர்க்குற்றத்தில் ஈடுபட்ட இலங்கை அரசையும், ஆட்சியாளர்களையும் சர்வதேச நீதி விசாரணைக்கு ஆட்படுத்தி உண்மைகளை வெளிக்கொணர வேண்டுமென நெடுங்காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர் அம்மக்கள்.

இந்த நிலையில், தமது கருத்துக்களால் அரசியல் அரங்கினை அதிரச்செய்யும் பாஜகவின் மூத்த தலைவர் சுப்ரமணிய சாமி , இலங்கையில் இறுதிகட்ட போர் நடைபெற்ற சமயத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரான பிரபாகரன் அவர்களை காப்பாற்றிட இந்திய காங்கிரஸ் கட்சியின் அப்போதைய தலைவராக இருந்த சோனியாவும், அப்போது மத்திய அமைச்சர் பதவி வகித்த ப.சிதம்பரமும் முயன்றதாக நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

மேலும், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய நபர்களுக்கு தூக்குத்தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டதையும், நளினியை சோனியாவின் மகள் சிறைக்கு நேரில் சென்று பார்த்ததையும் சுட்டிக்காட்டியுள்ள சு.சாமி இந்த விவகாரங்களின் பின்னணியில் பெரிய கதைகள் உள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ஈழ போரை நிறுத்த உதவவில்லை என காங்கிரஸ் – திமுக உள்ளிட்ட கட்சிகளின் மீது விமர்சனம் வைக்கப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.
நன்றி
லங்காஸ்ரீ