முக்கிய செய்திகள்

மதுரை இந்தியன் வங்கி கிளையில் ரூ. 10 லட்சம் கொள்ளை..


மதுரை இந்தியன் வங்கிக் கிளையில் 10 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரையில் உள்ள விளக்குத்தூண் பகுதியில் இந்தியன் வங்கிக் கிளை உள்ளது. நேற்று மாலை வங்கி கிளையின் மாடியில் ஊழியர் ஒருவருக்கு பணி ஓய்வு பாராட்டு விழா நடைபெற்றுக் கொண்டு இருந்தது. இதில் பங்கேற்க வங்கி ஊழியர்கள் சென்று இருந்தனர். இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள் அங்கிருந்த 10 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

கொள்ளை குறித்து வங்கி மேலாளர் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இதுதொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

வங்கி ஊழியர்கள் வங்கிக்குள் இருக்கும்போதே நடந்த இந்த சம்பவத்தால் வங்கி ஊழியர்களை மட்டுமின்றி, வங்கி வாடிக்கையாளர்களையும் அதிர்ச்சியில் ஆழத்தியுள்ளது.