“மக்களுடன் முதல்வர்” எனும் புதிய திட்டத்தை கோவையில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்…

“மக்களுடன்முதல்வர்” எனும் புதிய திட்டத்தை கோவையில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்…
கோவையில் மக்களுடன் முதல்வர்’ என்ற திட்டத்தை தொடக்கி வைத்து மனுக்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் பெற்று வருகிறார்.
அரசின் சேவைகள் கடைக்கோடி மனிதர்களின் கையிலும் எளிதில் சேர்ந்திட முன்னெடுக்கப்பட்டுள்ள திட்டமே மக்களுடன் முதல்வர் திட்டம்.
பொதுமக்களுக்கு அரசின் சேவைகள் விரைவாக கிடைக்கவும், பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது விரைந்து தீர்வு காணவும் தமிழக அரசு ‘மக்களுடன் முதல்வர்’ என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது. மக்களிடம் மனுக்கள் வாங்கிய 30 நாட்களில் தீர்வு காண்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இந்த திட்டத்தின் துவக்க விழா கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள எஸ்.என்.ஆர் கல்லூரி அரங்கத்தில் நடைபெற்றது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இந்த முகாமில் பங்கு பெற்றுள்ள மக்களுடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாக பேசி அவர்களது குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து அங்கு வரக்கூடிய மக்களுக்கு அவர்களது புகார் மனுக்கள், தேவைகள், குறைகளை கேட்டறிந்து ஆவணங்களை பூர்த்தி செய்யும் வழிமுறைகளை அதிகாரிகள் கூறினர். இவ்வாறாக பெறப்படும் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடபட்டுள்ளது.