திருமண அழைப்பிதழுடன் திருக்குறள் புத்தகம் கொடுத்து அசத்திய காரைக்குடி செட்டிநாடு பப்ளிக் பள்ளி தாளாளர்..

திருமண அழைப்பிதழுடன் வழங்கப்பட்ட திருக்குறள் 3 உள்அதிகாரகம் கொண்ட நுால்

காரைக்குடியில் செட்டிநாடு பப்ளிக் பள்ளியின் தாளாளர் சுப.குமரேசன் தனது மகன் திருமணத்திற்கு வித்தியாசமான முறையில் திருமண அழைப்பிதழுடன் திருக்குறள் உரைக்களஞ்சியம் கொடுத்து திருமணத்திற்கு அழைத்துள்ளார்.

திருக்குறளின் அறத்துப்பால்,பொருட்பால்,இன்பத்துப்பால் மூன்று பாகங்களு்கும் தனித்தனியாக உரைக்களஞ்சியத்தோடு 3 நுால்களாக கொடுத்து வருகிறார். திருக்குறளுக்கு உரை எழுதிய பரிமேளழகர் முதல் அனைத்து உரையெழுதிய ஆசிரியர்களின் தொகுப்புகளை செட்டிநாட்டு பப்ளிக் பள்ளியின் தமிழ்துறை சார்பில் தரமான முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது.


திருக்குறள் உள்அதிகாரத்தில் செட்டிநாடு பப்ளிக் பள்ளித் தாளாளர் திரு.சுப. குமரேசன் என்னுரை என்ற தலைப்பில்
“வளமாக வாழ்க என வாழ்த்துச் சொன்ன அன்பு உள்ளங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளை உரித்தாக்குகின்றேன். வாழையடி வாழையாக வான்புகழ் வள்ளுவரின் வழிகாட்டுதல் நுால் உங்கள் நல்வாழ்விற்கு துணையாகத் துாண்டுகோலாக அமையுமென நம்புகிறேன். இந்த பொன்னோடு உங்களை வந்தடையச் செய்ததில் பெருமை கொள்கிறேன் .”
எழுதியுள்ளார்.

பெரும்பாலும் திருமண அழைப்பிதழ்கள் சிறப்பான தயாரிப்புகளுடன் மிக அதிக விலையில் அச்சிடுவதை பார்த்துள்ளோம் ஆனால் திருமண அழைப்பிதழுடன் திருக்குறள் உரைக்களஞ்சியம் வழங்கியது அழைப்பிதழ் பெற்றுக் கொண்ட அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

திருமண அழைப்பிதழுடன் திருக்குள் உள்அதிகார நுால் வழங்கும் யோசனை எப்படி வந்தது என கேட்கும் போது திரு சுப.குமரேசன் அவர்கள் நாங்கள் திருமண அழைப்பிதழுடன் ஏதாவது சிறந்த பரிசு ஒன்று அளிக்க வேண்டும் எனத் தீர்மானித்திருந்தோம்.இதற்காக கும்பகோணம் வரை சென்று பல பொருட்களைத் தேடினோம் எதுவும் மனநிறைவாகத் தெரியவில்லை,

இந்நிலையில்தான் தான் வான்புகழ் வள்ளுவனின் வாழிகாட்டு நுாலான திருக்குறளை பரிசளி்க்கலாம் என்று எண்ணிய போது. வெறும் திருக்குறள் மட்டும் கொடுப்பதைவிட திருக்குறளுக்கு உரையெழுதியவர்களின் தொகுப்பை சேகரித்து 3 பாகங்களாக அதாவது அறத்துப்பால்,பொருட்பால்,இன்பத்துப்பால் என 3 பாகங்களாக தனித்தனியாக அச்சிட்டு வழங்கத் தீர்மானித்து செட்டிநாடு பப்ளிக் பள்ளியின் தமிழ்துறையால் சீரிய முறையில் தொகுத்து அச்சிட்டோம்.


திருமண அழைப்பிதழுடன் திருக்குறள் உள்அதிகார நுாலை வழங்கியபோது பெற்று கொண்ட அனைவர் முகத்திலும் மகிழ்ச்சியைக் கண்டோம். பலர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்தினர் எனத் தெரிவித்தார்.

திருமண அழைப்பிதழுடன் திருக்குறள் 3 உள்அதிகார நுால்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை படித்து பயன்பெறும் வகையில் அமைந்துள்ளது. வான்புகழ் வள்ளுவரின் குறள் நம்மை செழுமைப்படுத்துவதுடன் சமூகத்தையும் செழுமைப்படுத்தும்.என்பதில் ஐயமில்லை..


வித்தியாசமான முறையில் திருக்குறள் உள்அதிகார நுாலை திருமண அழைப்பிதழுடன் வழங்கிய செட்டிநாடு பப்ளிக் பள்ளியின் தாளாளர் திரு.சுப.குமரேசன் அவர்களுக்கு வாழ்த்துகளையும்,நன்றிகளையும் தெரிவிக்கின்றோம்.

செய்தி & படங்கள்
சிங்தேவ்