முக்கிய செய்திகள்

மருதாணியில் NO NRC, NO CAA: மணப்பெண்ணுக்கு குவியும் பாராட்டு…

மதுரையைச் சேர்ந்த மீனாட்சி சுந்தரம், பரிமளா தம்பதியரின் மகள் மருத்துவர் யாழினி. தஞ்சாவூரைச் சேர்ந்த கருணாநிதி, மீனா தம்பதியரின் மகன் பொறியாளர் க.செயன்நாதன். நேற்று மதுரையில் அவர்கள் இருவருக்கும் சுயமரியாதை முறையில் திருமணம் நடைபெற்றது.

இந்த திருமணத்துக்கு திராவிடர் கழக பரப்புரைச் செயலாளரும் வழக்கறிஞருமான அருள்மொழி தலைமைவகித்தார்.

திருமணத்துக்காக யாழினி கையில் வைத்துக் கொண்ட மருதாணியில் NO NRC, NO CAA என்ற வாசகங்கள் இடம் பெற்றிருந்தன.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு திருமண நிகழ்விலும் எதிர்ப்பு தெரிவித்த யாழினிக்கு நெட்டிசன்கள் பாராட்டு தெரிவித்துவருகின்றனர்.