ஊடக சதி; தலித் தோழன் வேடத்தில் திமுக எதிர்ப்பு: வே. மதிமாறன்

திமுக காரர்களிடமும் திமுக அல்லாத தலைவர்களிடமும் திமுக எதிர்ப்பையே பிரதான படுத்துகின்றன ஊடகங்கள்.

ஒரு புறம் கலைஞரை புகழ்ந்துவிட்டு, இன்னொருபுறம் ஸ்டாலின் தலைமையிலான திமுக விற்கு எதிரான வேலைகளைத் திட்டமிட்டுச் செய்கின்றன.

கலைஞரை புகழ்வதே ஸ்டாலின் அவர்களை எதிர்ப்பதற்குதான்.

சென்னையை குலுங்க வைத்த வன்கொடுமை தடுப்புச் சட்ட ஆதரவு ஆர்ப்பாட்டத்தைத் திட்டமிட்டு இருட்டடிப்பு செய்த ஊடகங்கள்தான், தலித் எதிர்ப்புக் கட்சியாகத் திமுக வை சித்தரிக்கின்றன.

புதியதலைமுறையில் வைகோவிடம் கேட்கப்பட்ட கேள்விகள் அதற்குச் சமீப சாட்சி. பாமக வோடு 2014 ல் கூட்டணியில் இருந்த வைகோவிடம் பாமக குறித்துத் தலித் ஆதரவு நிலைபாட்டில் கேள்வி கேட்காத ஊடகங்கள், இப்போது திமுக விற்கு எதிராகக் கேட்கிறார்கள். எந்த ஊரு நியாயம் இது?

உள்நோக்கம் கொண்ட புதியதலைமுறை பேட்டியை பாதியிலேயே முடித்த மதிமுக தலைவர் வைகோ அவர்களின் செயல் மரியாதைக்குரியது.

எப்போதுமே, டாக்டர் ராமதாஸிடம் கேட்கே வேண்டிய கேள்விகளை எல்லோரிடமும் கேட்பார்கள், அவரிடம் மட்டும் கேட்பதில்லை. ‘தலித்தல்லாத கூட்டமைப்பை உருவாக்கிய கட்சி எப்படி எல்லாத் தமிழர்களுக்குமான ஆட்சியைத் தர முடியும்?’ என்று இதுவரை யாரும் கேட்டதில்லை. (தமிழ் நாடு – sc, st தவிர)

வைகோவிடம் கேட்கப்பட்ட தலித் மக்கள் மீது அக்கறை கொண்ட இந்தக் கேள்விகளை; புதியதலைமுறை கார்த்திகைச் செல்வன், பாமக அன்புமணியிடம் கேட்க வேண்டும். கேட்பாரா? (அவரிடமும் திமுக விற்கு எதிராக அல்ல)

முன்நாட்களில் விவாதங்களில் கலந்து கொண்ட டாக்டர் கிருஷ்ணசாமியை, ‘கிருஷ்ணசாமி’ என்று பலமுறை விளித்த கார்த்திகை செல்வன்,
கடந்த தேர்தலின் போது டாக்டர் அன்புமணியின் வீட்டுக்குச் சென்று எடுத்த பேட்டியில் அவரை ‘அன்புமணி’ என்று ஒருபோதும் விளித்ததில்லை. ‘டாக்டர் அன்புமணி’ என்று கூட அல்ல, ‘டாக்டர்’ என்று மட்டுமே அன்பு பொங்க அழைத்தார். (டாக்டர்களுக்குள் பாராபட்சம்)

பார்ப்போம். வைகோ அவர்களிடம் கேட்ட தலித் அக்கறை கேள்விகளை டாக்டர் அன்புமணியிடமும் கேட்கிறாரா என்று?

‘அப்படிக் கேட்டுட்டா?’

‘ஏன் இவ்வளவு நாளா கேட்கல?’ என்று கேட்க மாட்டேன்.

‘மகிழ்ச்சி. வாழ்த்துகள். நன்றி.’

இப்பவே சொல்லி வைக்கிறேன். 

– வே. மதிமாறன் முகநூல் பதிவில் இருந்து…