முக்கிய செய்திகள்

மருத்துவ காப்பீடு திட்டத்திற்கான நிதி ஆதாரம் எங்கே?: ப.சிதம்பரம் கேள்வி..


மருத்துவக்காப்பீட்டுத்திட்டத்திற்கான நிதி ஆதாரத்தை மத்திய அரசு காண்பிக்கவில்லை என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

கொல்கத்தாவில் நடைபெற்ற வர்த்தக மாநாட்டில் பங்கேற்றுப் பேசிய அவர், 50 கோடி பேருக்கு சுகாதார காப்பீடு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ள மத்திய அரசு இதற்கான நிதியை எங்கிருந்து கொண்டுவரப் போகிறது என கேள்வி எழுப்பினார். கூடுதல் வரி விதிப்பதால் மட்டுமே அரசால் நிதி திரட்ட முடியும் என்று கூறிய ப.சிதம்பரம், லலித் மோடி அல்லது நீரவ் மோடியிடமிருந்து அரசுக்கு பணம் கிடைப்பதற்கான உத்தரவாதம் ஏதும் இருக்கிறதா என கேள்வி எழுப்பினார்.