மினி கிளினிக்குகளுக்கு ஒப்பந்த முறையில் பணியாளரை நியமிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தடை…

தனியார் ஏஜென்சி மூலம் மினி கிளினிக்குகளுக்கு பணியாளரை நியமிப்பதை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. மதுரையைச் சேர்ந்த வைரம் சந்தோஷ் என்பவர் மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
தனியார் ஏஜென்சி மூலம் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக சுகாதாரத்துறை இயக்குனர் அறிக்கை அனுப்பியிருந்தார்.

தமிழகத்தில் புதிதாக திறக்கப்பட்டுள்ள மினி கிளினிக்குகளுக்கு ஒப்பந்த முறையில் பணியாளரை நியமிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தடை விதித்திருந்தது.

தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ள மினி கிளினிக்குகளில் 585 மருத்துவ உதவியாளர்கள், 1415 செவிலியர்கள் நியமிக்கப்பட உள்ளனர் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. தனியார் ஏஜென்சி மூலம் பணியாளர்களை நியமித்தால் வேலைவாய்ப்பு முன்பதிவு, இனசுழற்சி முறை பாதிக்கப்படும் என வாதம் நடைபெற்றது. எனவே தனியார் ஏஜென்சி மூலம் பணியாளர் தேர்வு செய்யும் திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என மனுதாரர் கோரிக்கையும் விடுத்திருந்தார்.

இந்நிலையில் நீதிபதிகள் எம்.எம்.சந்தரேஷ் மற்றும் ஆனந்தி அமர்வு மனுவை விசாரித்து தற்போதைய நியாமன முறையே தொடர ஆணையிட்டுள்ளது. தமிழகத்தில் புதிதாக திறக்கப்பட்டுள்ள மினி கிளினிக்குகளுக்கு ஒப்பந்த முறையில் பணியாளரை நியமிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை மதுரை கிளை தடைவிதித்துள்ளது. நீதிமன்ற ஆணையின் காரணமாக மினி கிளினிக்குகளுக்கு தனியார் ஏஜென்சி மூலம் பணியாளரை நியமிக்க முடியாது என உத்தரவிட்டுள்ளது.