அமைச்சர் இராஜகண்ணப்பனுக்கு உயர்கல்வித்துறை கூடுதல் பொறுப்பு..

பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு உயர்கல்வித்துறை கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றதால் அவர் பதவியிழந்தார். அவர்வகித்த உயர்கல்வித்துறை பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.