முக்கிய செய்திகள்

பிரதமர் மோடி மீதான நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாகிவிட்டது : ராகுல் ..


குஜராத் தேர்தல் முடிவுகள் பாஜக-விற்கு பேரதிர்ச்சியை தந்துள்ளதாக காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

மேலும் குஜராத் வளர்ச்சி என்பது வெற்று பிரச்சாரம் என்பது இதன் அம்பலமாகியுள்ளது என்றும் பாஜக-வின் பிரச்சாரம் குஜராத்தில் தோல்வியடைந்துவிட்டது என்று தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியை பொறுத்த வரை தேர்தல் முடிவுகள் திருப்தி அளிப்பதாக ராகுல் தெரிவித்துள்ளார்.

ஊழல் குற்றசாட்டுகள் குறித்து தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி வாய் திறக்கவில்லை எனவும் ராகுல் குற்றசாட்டியுள்ளார்.

பிரதமர் மோடியின் நம்பகத்தன்மை கேள்விக்கு உள்ளாகிவிட்டது என ராகுல் தெரிவித்துள்ளார்.