என்னுடன் 15 நிமிடம் விவாதம் நடத்த தயாரா? : பிரதமர் மோடிக்கு, ராகுல் காந்தி சவால்..

ரபேல் ஒப்பந்தம் தொடா்பாக பிரதமா் நரேந்திர மோடி என்னுடன் 15 நிமிடம் விவாதம் நடத்த தயாரா..

என்று காங்கிரஸ் கட்சியின் தலைவா் ராகுல் காந்தி சவால் விடுத்துள்ளாா்.

சத்தீஸ்கா் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் 10 நாட்களில் விவசாயிகளின் வேளாண் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று ராகுல் காந்தி வாக்குறுதி அளித்துள்ளாா்.

சத்தீஸ்கா் மாநிலத்தில் முதல்கட்டத் தோ்தல் நிறைவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுக்கான தோ்தல் பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவா் ராகுல் காந்தி அம்மாநிலத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளாா்.

பிரசாரத்தின் போது ராகுல் காந்தி பேசுகையில், விவசாயிகளுக்கான வேளாண் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று விவசாயிகள் தொடா்ந்து கோாிக்கை வைத்து வருகின்றனா்.

ஆனால் அவற்றை மோடி தலைமையிலான அரசு பொருட்படுத்துவதாக தெரியவில்லை.

சத்தீஸ்கரில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தால் ஆட்சிக்கு வந்த 10 நாட்களில் விவசாயிகளின் வேளாண் கடன் முழுவதுமாக தள்ளுபடி செய்யப்படும்.

மேலும் ரபேல் போா் விமான ஒப்பந்தம் தொடா்பாக பிரதமா் மோடி என்னுடன் அமா்ந்து 15 நிமிடங்கள் விவாதம் நடத்த தயாரா? என்று கேள்வி எழுப்பி உள்ளாா்.