பிரதமர் மோடி இன்று கோவையில் தேர்தல் பரப்புரை..

கோவை, திருப்பூர், பொள்ளாச்சி, நீலகிரி மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடும் பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து,

கோவையில் இன்று நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரை நிகழ்த்துகிறார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 18ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுவதால் பிரசாரத்திற்கு இன்னும் 8 நாட்களே உள்ளன.

இந்நிலையில், கோவை கொடிசியா மைதானத்தில் இன்று மாலை 6 மணியளவில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசுகிறார்.

தனி விமானம் மூலம் கோவை வரும் அவரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரவேற்று பொதுக்கூட்டத்திற்கு அழைத்து வருகிறார்.

கோவை பா.ஜ.க வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் மற்றும் அதிமுக வேட்பாளர்களான பொள்ளாச்சி மகேந்திரன், திருப்பூர் ஆனந்தன் , நீலகிரி தியாகராஜன் ஆகியோரை ஆதரித்து அவர் உரை நிகழ்த்துகிறார்.

பிரசாரத்தை முடித்து கொண்டு அங்கிருந்து டெல்லி திரும்புகிறார்.

பிரதமர் வருகையையொட்டி விமான நிலையம் முதல் கொடிசியா மைதானம் வரையிலான பகுதி முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் இப்பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ளனர்.

டெல்லியில் இருந்து வந்துள்ள சிறப்பு பாதுகாப்பு படையினர் கடந்த 2 நாட்களாக இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு, தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.