ஏலம் விடாமலே நகராட்சி கார் விற்பனை : காரைக்குடி நகர மன்ற கூட்டத்தில் கேள்வி..

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகர் சபைக்கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சித் தலைவர் முத்து துரை தலைமையில் நடைபெற்றது.

இந்தக்கூட்டத்தில் நகர் மன்ற உறுப்பினர் பிரகாஷ் பேசும் போது நகராட்சிக்கு சொந்தமான கார் ஏலம் விடப்படாமல் விற்றது ஏன் என கேள்வியெழுப்பினார்.

மேலும் அவர் நகராட்சி பொருட்கள் ஏலம் விடுவதை நகர்மன்ற உறுப்பினர்களுக்கத் தெரிய வேண்டும் என்று கடந்த நகர் மன்றக் கூட்டத்தில் தெரிவித்திருந்தேன்.ஆனால் நகராட்சிக்கு சொந்தமான 2008 மாடல் (Bolero 2008 model) கார் நல்லநிலையில் இருந்து வந்த நிலையில் எந்த விதமான ஏல அறிவிப்பும் விடாமல் உறுப்பினர்களுக்கும் தெரியப்படுத்தாமல் வெறும் ரூ. 70,000 -க்கு ஏலம் விட்டதாக காரை விற்றது ஏன்?

Bolero 2008 model காரின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ. 2 லட்சத்து 25 ஆயிரம் ஆகும். அதனை ஏன் குறைந்த விலைக்கு முறையான ஏல அறிவிப்பு இல்லாமல் விற்றது எப்படி என்றார். இதனால் நகராட்சிக்கு ரூ.1,55,000 இழப்பு ஏற்பட்டுள்ளது என கேள்வியெழுப்பி குற்றம் சாட்டினார்.

இதற்கு பதில் அளித்த நகர்மன்றத் தலைவர் முத்துதுரை எனது கவனத்திற்கு கார் ஏலம் மூலம் விற்றது வரவில்லையென்றார்.

அருகில் இருந்த நகர் மன்ற ஆணையர் கூறும் போது காரின் விலையை நிர்ணயித்தது வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள்தான், அவர்களின் விலை நிர்ணயப்படியே கார் விற்பனை செய்ததாக பதிலளித்தார்.

எப்படியோ காரைக்குடி நகராட்சிக்கு ரூ.1,55,000 வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்பதை தவிர்க்க முடியுமா..

செய்தி & படங்கள்
சிங்தேவ்