ஒரு நாள் கிரிக்கெட் : குல்தீப் அசத்தல் சாதனை..


குல்தீப் யாதவ் 6 விக்கெட் வீழ்த்திய போதிலும் பென் ஸ்டோக்ஸ், பட்லர் அரைசதங்களால் இந்தியாவிற்கு 269 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது இங்கிலாந்து

முதல் ஒருநாள் போட்டியில் அசத்தலாக பந்துவீசிய குல்தீப் யாதவ் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை திணறடித்தார்.

10 ஓவர்களுக்கு 25 ரன்கள் மட்டுமே கொடுத்து 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதன்மூலம் தனது பெஸ்ட் இன்னிங்ஸை பதிவு செய்ததுடன் ஒருநாள் போட்டியில் 6 விக்கெட்டுகளை எடுத்த முதல் இடக்கை ஸ்பின்னர் என்ற பெருமையையும் பெற்றார்.

இங்கிலாந்து – இந்தியா இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் முடிவடைந்த நிலையில், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் நாட்டிங்காமில் இன்று தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பந்துவீச்சு தேர்வு செய்தார்.

இந்திய அணியில் 32 மாதங்களுக்குப் பிறகு சுரேஷ் ரெய்னாவும், 10 மாதங்களுக்குப் பிறகு கேஎல் ராகுலும் இடம்பிடித்தனர். வேகப்பந்து வீச்சாளர் சித்தார்த் கவுல் அறிமுகமானார்.

ஜேசன் ராய், பேர்ஸ்டோவ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.

இதனால் இங்கிலாந்து பவர் பிளேயான முதல் 10 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 71 ரன்கள் குவித்தது.

மறுமுனையில் விளையாடிய பென் ஸ்டோக்ஸ் 102 பந்தில் அரைசதம் அடித்தார். அரைசதம் அடித்த கையோடு குல்தீப் யாதவ் பந்தில் வெளியேறினார். பென் ஸ்டோக்ஸ் விக்கெட் மூலம் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதன்முறையாக ஐந்து விக்கெட்டுக்களை சாய்த்தார்.

அதோடு மட்டுமல்லாமல் டேவிட் வில்லியே விக்கெட்டையும் வீழ்த்தினார். குல்தீப் யாதவ் 10 ஓவரில் 25 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுக்கள் சாய்த்தார்.

அதன்பின் வந்த மொயீன் அலி 23 பந்தில் 24 ரன்களும், அடில் ரஷித் 16 பந்தில் 22 ரன்களும் அடிக்க இங்கிலாந்து 49.5 ஓவரில் 268 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

இதனால் இந்தியாவிற்கு 269 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இங்கிலாந்து. உமேஷ் யாதவ் 9.5 ஓவர்கள் வீசி 70 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். சாஹல் 51 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார்.

இதனால் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் இந்தியாவின் பந்து வீச்சை துவம்சம் செய்து விடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்ந நிலையில்தான் 11-வது ஓவரை குல்தீப் யாதவ் வீசினார்.

இந்த ஓவரின் 2-வது பந்தில் ஜேசன் ராய் 38 ரன்கள் எடுத்த நிலையில் யாதவ் பந்தில் ஆட்டமிழந்தார்.

13-வது ஓவரை குல்தீப் யாதவ் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் ஜோ ரூட்டையும், 5-வது பந்தில் பேர்ஸ்டோவ்-ஐயும் எல்பிடபிள்யூ மூலம் வீழ்த்தினார்.

இதன் மூலம் 10 பந்தில் 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தி இங்கிலாந்து ரன் குவிப்பிற்கு தடைபோட்டார். தொடர்ந்து நான்கு ஓவர்கள் வீசிய குல்தீப் யாதவ் 9 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

இதனால் இங்கிலாந்து அணியின் ரன்வேகத்தை கட்டுப்படுத்தினார். 5-வது விக்கெட்டுக்கு பென் ஸ்டோக்ஸ் உடன் அதிரடி வீரர் ஜோஸ் பட்லர் ஜோடி சேர்ந்தார்.

பென் ஸ்டோக்ஸ் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த பட்லர் மிரட்டலாக விளையாடினார். ஜோஸ் பட்டர் 45 பந்தில் 5 பவுண்டரியுடன் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய பட்லர் 53 ரன்கள் எடுத்த நிலையில் குல்தீப் யாதவ் பந்தில் ஆட்டமிழந்தார்.