முக்கிய செய்திகள்

முதல் ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய அணி பேட்டிங்..


தரம்சலாவில் நடைபெறும் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் திசர பெரேரா முதலில் இந்திய அணியை பேட் செய்ய அழைத்துள்ளார்.

ஒருவேளை பனிப்பொழிவு இருக்கும் போது இந்திய பவுலர்கள் சிரமப்படுவார்கள் என்று எதிர்பார்த்து இந்திய அணியை முதலில் பேட் செய்ய அழைத்துள்ளார் என்று தெரிகிறது.

இந்திய அணியில் அஜிங்கிய ரஹானே இல்லை, ஷ்ரேயஸ் ஐயருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மணீஷ் பாண்டே அணியில் உள்ளார்.

இந்திய அணி வருமாறு: ரோஹித் சர்மா, தவண், ஷ்ரேயஸ் ஐயர், மணிஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக், தோனி, ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ், பும்ரா, சாஹல்

இலங்கை அணி: தரங்கா, குணதிலக, திரிமானே, மேத்யூஸ், குணரத்னே, டிக்வெல்லா, திசர பெரேரா, சசித் பதிரனா, சுரங்க லக்மல், தனஞ்ஜய, நுவான் பிரதீப்.