முக்கிய செய்திகள்

பேரறிவாளனுக்கு நிபந்தனையற்ற பரோல் வழங்கவேண்டும்: அற்புதம்மாள்..

பேரறிவாளனை தன்னிடம் ஒப்படைப்பேன் என முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உறுதியளித்தநிலையில், விடுதலை செய்ய வலியுறுத்துவோம் என தற்போதைய ஆட்சியாளர்கள் கூறிவருவது தனக்கு வேதனையளிப்பதாக அற்புதம்மாள் தெரிவித்துள்ளார்.

சிறுநீரக தொற்று காரணமாக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள பேரறிவாளனை சந்திக்க வந்தபோது செய்தியாளர்களிடம் இவ்வாறு தெரிவித்தார்.

மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளவர்களே விடுதலை செய்ய வலியுறுத்துவோம் என கூறுவதை எப்படி எடுத்துக்கொள்வது எனத் தெரியவில்லை எனவும் கூறினார்.

மேலும், பேரறிவாளனின் மோசமான உடல்நிலையைக் கருத்தில்கொண்டு அவரை நிபந்தனையற்ற பரோலில் விடுவித்து உதவவேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.