காவல்துறையில் பெண்களின் பாலியல் புகார்களை விசாரிக்க விஷாகா கமிட்டி இல்லை என்பது அவமானம் : கனிமொழி..


காவல்துறையில் மகளிர் பாதுகாப்புக்கான விஷாகா கமிட்டி இல்லை என்பது அதிர்ச்சி அளிக்கிறது என திமுக எம்பி கனிமொழி கூறியுள்ளார்.

காவல்துறையிலேயே பெண்களின் பாலியல் புகார்களை விசாரிக்க விஷாகா கமிட்டி இல்லை என்பது அவமானம் என்றும் அவர் கூறினார்.

முன்னதாக பணியிடங்களில் பெண்கள் பாதுகாப்புக்காக விஷாகா கமிட்டி அமைக்க 1997ல் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது குறிப்பிடத்தக்கது.