பொதுத்துறை வங்கிகளின் மறு மூலதனத்திற்காக ₹48,239 கோடி நிதி அளிக்க மத்திய அரசு ஒப்புதல்..

12 பொதுத்துறை வங்கிகளின் மறு மூலதனத்திற்காக ₹48,239 கோடி நிதி அளிக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

வாராக்கடன் அதிகரிப்பு, நிதி மோசடிகள் போன்ற காரணங்களால் பொதுத்துறை வங்கிகள் நெருக்கடியில் உள்ளன.

இதையடுத்து பொதுத்துறை வங்கிகளின் செயல்பாட்டையும், நிதி சார்ந்த பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையிலும் 12 பொதுத்துறை வங்கிகளுக்கு ₹48,239 கோடியை மறு மூலதனத்திற்கு வழங்க மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது.

இதில் அதிகபட்சமாக கார்ப்பரேஷன் வங்கிக்கு ₹9,086 கோடியும், குறைந்த பட்சமாக பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா வங்கிக்கு ₹205 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

அலகாபாத் வங்கி ₹6,896 கோடியும், வைர வியாபாரி நிரவ் மோடியின் நிதி மோசடியால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு ₹5,908 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.