முக்கிய செய்திகள்

புதுச்சேரியில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தம்…

புதுச்சேரியில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நிலுவையில் உள்ள சம்பளம், கடந்த ஆண்டு தீபாவளி போனஸை உடனே வழங்க வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மாநில அளவில் 135 புதுச்சேரி அரசு பேருந்துகள் இயங்காததால் பயணிகள் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர்.