முக்கிய செய்திகள்

ரஷ்யாவுக்கு வருமாறு ட்ரம்புக்கு புதின் அழைப்பு ..


அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை ரஷ்யா வர அழைப்பு விடுத்துள்ளதாக அந்நாட்டு அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ரஷ்ய அதிபர் புதின் இதனை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரிக்ஸ் மாநாட்டில் நடந்த செய்தியாளஎர் சந்திப்பில் புதின் கூறும்போது, “நாங்கள் அதிபர் ட்ரம்பை ரஷ்யாவுக்கும் அழைக்க தயாராக இருக்கிறோம், ஏற்கனவே இது தொடர்பாக ட்ரம்புக்கு அழைப்பு விடுத்திருக்கிறேன்.

நாங்கள் இருவரும் இதுபோன்ற சந்திப்புகளுக்கு தயராக இருக்கிறோம். எங்களுடைய முந்தைய சந்திப்பில் நான் ட்ரம்ப் கூறியதை நன்றாக புரிந்து கொண்டேன். நாங்கள் இருவரும் மீண்டும் சந்திக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இருக்கிறது. நானும் அதற்கு தயாராக இருக்கிறேன். நானும் அமெரிக்காவுக்கு செல்ல தயாராக இருக்கிறேன்” என்று கூறினார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் பின்லாந்து தலைநகர் ஹெல்சின்கியில் கடந்த 16 ஆம் தேதி சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்பு 2 மணி நேரம் நீடித்தது. அதன்பின் இருநாட்டு வெளியுறவு அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் அடங்கிய குழுவினருடன் இணைந்து ட்ரம்பும் புதினும் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சந்திப்பு 90 நிமிடங்கள் நீடித்தது. அதன்பின் புதினும் ட்ரம்பும் நிருபர்களுக்கு கூட்டாக பேட்டியளித்தனர்.

இதில் அதிபர் ட்ரம்ப் ரஷ்ய அதிபர் புதினுக்கு ஆதரவாக நடந்துக் கொண்டார் என்று குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனை ட்ரம்ப் மறுத்தார்.

இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்பை ரஷ்யாவுக்கு வர அந்நாட்டு அதிபர் புதின் அழைப்பு விடுத்திருக்கிறார்.