ரயில் நிலையங்களில் மீண்டும் வருது மண் குவளை..

15 ஆண்டுகளுக்கு பின் ரயில் நிலையங்களில் மீண்டும் மண் குவளைகள் பயன்பாட்டுக்கு வருகிறது.

15 ஆண்டுகளுக்கு முன் ரயில்வே அமைச்சராக இருந்த லாலு பிரசாத், ரயில் நிலையங்களில் மண் குவளைகளை அறிமுகம் செய்தார்.

ஆனால் அது நிலைக்காமல் படிப்படியாக பிளாஸ்டிக் மற்றும் காகித ‘கப்’ பயன்பாட்டுக்கு வந்தது.

இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி, ரேபரேலி ரயில் நிலையங்களில் டீ, காபி, உணவுப்பொருட்கள் தயாரித்து அளிக்கிறவர்களிடம் மண் குவளை, டம்ளர்கள், தட்டுகளை பயன்படுத்துமாறு ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் அறிவுறுத்தி உள்ளார்.

இதுபோன்று நாடு முழுவதும் அமல்படுத்தலாம் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக அமைந்துள்ளது.

லட்சக்கணக்கான மண்பாண்ட உற்பத்தியாளர்களுக்கு வேலைவாய்ப்பும், வருமானமும் கிடைக்கும் என காதி மற்றும் கிராம தொழிற்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.