முக்கிய செய்திகள்

தமிழகம், புதுவையில் 3 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு!

தமிழகம், புதுச்சேரியில் 3 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. வரும் 3 நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக பல்வேறு வானிலைத் தகவல்களும் தெரிவித்தன. ஆனால், மிதமான மழை மட்டுமே பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Rain Update