மாநிலங்களவைத் தேர்தல் : திமுக வேட்பாளர் என்.ஆர்.இளங்கோ வாபஸ்..

மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு வேட்புமனுதாக்கல் செய்த திமுக வேட்பாளர் என்.ஆர். இளங்கோ வேட்புமனுவை வாபஸ் பெற்றார்.

11 பேர் வேட்புமனுத்தாக்கல் செய்ததில் 4 பேரின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதை அடுத்து 7 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டது.

இந்நிலையில் என்.ஆர் இளங்கோ வாபஸ் பெற்றதை தொடர்ந்து வைகோ உள்ளிட்ட 6 பேரும் போட்டியின்றி தேர்வாக உள்ளனர்.