ராஜஸ்தானில் சாலையோரம் கிடந்த வாக்குப்பதிவு இயந்திரம்..

ராஜஸ்தானில் நேற்று நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலின் போது பயன் படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரம் சாலையோரத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

ராஜஸ்தான் சட்டப்பேரவைக்கான தேர்தல் நேற்று (டிச.,07) நடைபெற்றது.

இதில் 72.62 சதவீதம் ஓட்டுக்கள் பதிவாகி இருந்தன. இந்நிலையில் நேற்று இரவு, ஷாகாபாத் பகுதியில் சாலையோரத்தில் வாக்குப்பதிவு இயந்திரம் ஒன்று கேட்பாரற்று கிடந்துள்ளது.

இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் அளித்த தகவலின் பேரில் அங்கு சென்ற தேர்தல் அதிகாரிகள்,

வாக்குப்பதிவு இயந்திரத்தை பத்திரமாக எடுத்துச் சென்றனர். சாலையோரம் கிடந்தது கிஷன்கஞ்ச் தொகுதியில் பதிவான வாக்குகளைக் கொண்ட இயந்திரம் என்பது தெரிய வந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக அலட்சியமாக செயல்பட்டதாக தேர்தல் அதிகாரிகள் 2 பேர் பணிணிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் எவ்வாறு சாலையோரத்தில் கிடந்தது என்பது குறித்து காவ்துறையினரும், தேர்தல் அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.