முக்கிய செய்திகள்

ராமஜெயம் கொலை வழக்கு : சிபிஐக்கு மாற்றம்..


திருச்சியில் முன்னாள் அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மர்ம நபர்களால் கடத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் குற்றவாளியைக் கண்டுபிடிக்க தமிழக போலீசாரால் முடியவில்லை வழக்கை சிபிஐக்கு மாற்ற வலியுறுத்தி ராமஜெயம் மனைவி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தமிழக காவல்துறையிடமிருந்து சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. கொலை குற்றவாளியைக் கண்டறியாத நிலையில் தற்போது இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டது உயர்நீதிமன்ற மதுரை கிளை.