இறக்குமதி மணல் விற்பனைக்கான முன்பதிவு தொடங்கியது: யாருக்கெல்லாம் கிடைக்குமோ?

தூத்துக்குடி துறைமுகத்தில் வைக்கப்பட்டுள்ள இறக்குமதி மணல் விற்பனைக்கான முன்பதிவு மாலை 4 மணிக்கு தொடங்கியது. தமிழ்நாடு அரசு மணல் இணையசேவை மூலம் இதற்கான முன்பதிவைச் செய்யலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக அரசு அறிவித்திருந்த படி, தமிழ்நாடு மணல் இணைய சேவை தளம் மற்றும் கைபேசி செயலி மூலம்  இறக்குமதி மணல் தேவைப்படுவோர் முன்பதிவு செய்து வருகின்றனர். முன்பதிவின் மூலம் முதற்கட்டமாக 11 ஆயிரம் யூனிட்டுகள் மணல் மட்டும் வழங்கப்பட உள்ளது. முதலில் பதிவு செய்வோருக்கே முன்னுரிமை வழங்கப்படும் என்றும், முன்பதிவு செய்பவர்களுக்கு அடுத்த  வாரத்திலிருந்து மணல் வழங்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. TNsand இணையதளத்தில் பதிவுசெய்யாத வாகனகளுக்கும் மணல் வழங்கப்படும் எனவும் இணையதளத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி,  சுமார் 4.5 மெட்ரிக் டன் எடை கொண்ட ஒரு யூனிட் மணலின் விலை 9 ஆயிரத்து 990க்கு விற்பனை செய்யப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.  2 யூனிட் மணல்19,980 ரூபாய்க்கும், 3 யூனிட் மணல் 29,970 ரூபாய்க்கும், 4 யூனிட் மணல் 39,960 ரூபாய்க்கும், 5 யூனிட் மணல் 49,950 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

Registration for Import Sand began from Friday Evening 4PM