தமிழகத்தில் நெருப்பு வளைய சூரிய கிரகணம் அபூர்வ காட்சி..

30 ஆண்டுகளுக்கு ஒருமுறை வானில் தோன்றும் ஆபூர்வ நிகழ்வான நெருப்பு வளைய சூரிய கிரகணம் காலை 8 மணிக்கு தொடங்கி முழு சூரியக்கிரகணம் தெரிந்தது .

சவுதி அரேபியாவின் கடல் பகுதி மற்றும் ஊட்டியில் பகுதி நேர சூரிய கிரகணம் தெரிய தெரிந்தது..

சூரிய கிரகணம் என்பது வானத்து சந்திரனின் நிழல் விளையாட்டுதான். சூரியனுக்கும், பூமிக்கும் இடையில் சந்திரன் நேராக வந்து, அதன் நிழல் சூரியனை மறைத்தால், அது சூரிய கிரகணம். சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையில் பூமி வரும்போது அதன் நிழல் சந்திரன் மீது விழுந்து சந்திர ஒளியை மறைத்தால் அது சந்திர கிரகணம். சூரிய கிரகணம் அமாவாசை நாளிலும், சந்திர கிரகணம் முழு நிலா நாளிலும் வரும்.

சூரிய கிரகணத்தின் போது சந்திரனின் நிழல் முழுமையாக சூரியனை மறைத்துவிட்டால் அது முழு சூரிய கிரகணம். சந்திரனின் நிழல் சூரியனின் வட்டத்துக்குள் விழுந்து, சூரியன், நெருப்பு வளையமாக (தண்ய்ஞ் ர்ச் ச்ண்ழ்ங்) தெரிந்தால் அது வளைய சூரிய கிரகணம் எனப்படும். சூரியன் சந்திரனின் நிழலால் பகுதி சூரியன் மட்டும் மறைக்கப்பட்டால் அது பகுதி சூரிய கிரகணம். இன்று நடைபெறுவது அபூர்வ நெருப்பு வளைய சூரிய கிரகணம்.

தமிழகத்தில் திருச்சி,கரூர் , திண்டுக்கல், திருப்பூர், கோவை உள்ளிட்ட சில பகுதிகளில் சூரிய கிரகணம் தெளிவாக தெரிந்தது. .
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த காட்சியை மைதானங்களில் கண்டு களித்து வருகின்றனர்.

காலை 8.06 மணிக்கு தொடங்கிய கிரகணம்,. தமிழகத்தில் 9.29 மணிக்கு தெளிவாக தெரிந்தது .
தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர், கரூர், திருச்சி, மதுரை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் சூரிய கிரகணம் தென்பட்டது..

கர்நாடகம், கேரள மாநிலங்களில் இந்த அபூர்வ நெருப்பு வளைய சூரிய கிரகணத்தை காண முடியும்.

கேரள மாநிலம் கொச்சி, ஒடிசா மாநிலம் புவனேஸ்வர், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இன்று காலை 8.06 மணியளவில் அபூர்வ நெருப்பு வளைய சூரிய கிரகணம் தெரிந்தத..

கத்தார், சவுதி அரேபியா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளிலும் காட்சியளிக்கத் தொடங்கியது. சூரிய கிரகணம் ஒவ்வொரு பகுதியிலும் ஊதா, மஞ்சள், சிவப்பு என ஒவ்வொரு நிறத்தில் காட்சியளிக்கிறது. ஒடிசா மாநிலத்தில் அரசு விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டு ஜூன் 21 ஆம் தேதி உத்தரகாண்ட், ராஜஸ்தான், அரியானா மாநிலங்களில் அடுத்த முழு சூரிய கிரகணமானது தோன்றும் என்றும், தமிழகத்தில் 2031 ஆம் ஆண்டு மே 21 ஆம் தேதி காணப்படும் என்று கூறப்படுகிறது.

சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பகுதி நேர சுரிய கரிகணத்தை பார்த்து வருகிறார்கள்.