ஆசிய விளையாட்டுப் போட்டி : டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்திய அணிக்கு தங்கம்..


இந்தோனேசியத் தலைநகர் ஜகர்தாவில் நடைபெற்றுவரும் 18 வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் 6-ஆம் நாளான இன்று டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்திய அணி தங்கம்வென்றது.

இந்திய அணியில் ரோகன் போபன்னா ,சாரன் இணை 6-3,6-3 என்ற நேர் செட்களில் கஸகிஸ்தான் இணையை வென்றது.

இந்தியா 6 தங்கம்,4 வெள்ளி,12 வெண்கலப்பதக்கங்களை வென்றுள்ளது.