சமஸ்கிருதத்தை தேசிய மொழியாக அறிவிக்க கோரிய மனு : உச்சநீதிமன்றம் தள்ளுபடி …

சமஸ்கிருதத்தை தேசிய மொழியாக அறிவிக்க கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தேசிய மொழியாக அறிவிக்க நாடாளுமன்றம் தான் சட்டம் இயற்ற முடியும் எனக்கூறி உச்சநீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்துள்ளது.

மேலும் இது போல் வெற்று விளம்பரத்திற்காக வழக்கு தொடரக்கூடாது என மனுதாரை கண்டித்துள்ளது உச்சநீதிமன்றம்.