முக்கிய செய்திகள்

சூலூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ கனகராஜ் மாரடைப்பால் காலமானார்..

கோவை மாவட்டம் சூலூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ கனகராஜ்( வயது 64)  மாரடைப்பால் மரணம் அடைந்தார்.  இன்று காலை நாளிதழ் படித்துக்கொண்டு இருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, குடும்பத்தினர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். ஆனால், வரும் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.