மு.க.ஸ்டாலின் மீது வலைத் தளங்களில் அவதூறு செய்தி..

‘இல்லாத ஒன்றை இருப்பதாகச் சொல்ல முடியும்; நடக்காத ஒன்றை நடந்ததாகக் காட்ட முடியும்; பேசாத ஒன்றைப் பேசியதாகப் பதிவு செய்ய முடியும்.’

இதெல்லாம் சாத்தியமா? என்று நீங்கள் கேட்டால், ‘வலைத்தளங்களையும், நெட்டிசன்களையும் அறியாத அப்பாவியாக இருக்கின்றீர்களே!’ என்று யோசிக்காமல் சொல்லிவிடலாம். அந்த அளவுக்கு, வலைத்தளங்களில் இன்று புரட்டுப் புரட்சி செய்பவர்கள் மலிந்து கிடக்கிறார்கள். இத்தகையவர்களின் பிடியில் அரசியல் தலைவர்களில் இருந்து சினிமா நடிகர்கள் வரை சிக்கித் தவிக்கிறார்கள். நாடார் ஓட்டு வங்கியை திமுகவுக்கு எதிராகத் திருப்ப வேண்டும் என்று திட்டமிட்டு, நெட்டிசன்கள் சிலர் வைத்த பொறியில் இப்போது மாட்டியிருக்கிறார் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின். இதன் விளைவாக, நாகர்கோவிலில் மு.க.ஸ்டாலின் கொடும்பாவி எரிப்பு கூட நடந்திருக்கிறது. திமுக மீது ஏன் இந்த டார்கெட்?

வலைத்தளங்களில் பரவிய வதந்தி!

கடலூரில் கடந்த 25-ஆம் தேதி திமுக மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடந்தது. அந்த மேடையில் மைக் பிடித்த ஸ்டாலின் “ரொம்ப சாதாரணமாகச் சொல்கிறார்கள். கழகம் இல்லாத தமிழகமாம். ஏய். களவாணிப் பசங்களா.. உங்களைப் பார்த்து நான் கேட்கிறேன். இந்த மேடையிலே நின்று.. திமுக மேடையிலே நின்று.. நீயே ஒரு புறம்போக்காக இருக்கக்கூடிய… . நீயே ஒரு மேடை போட்டு.. மேடையிலே நின்று பேசக்கூடிய இந்தத் தெம்பை இந்தத் திராணியை உருவாக்கித் தந்த மண் இந்த திராவிட மண்.” என்று பேசினார்.